கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நேற்று குடந்தை மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் பங்கேற்றோர். 
Regional03

தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர் தேவாலயங்களில் - குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி : ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர், பெரம்பலூர், அரிய லூர், கரூர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை உணர்ந்து, உலகமக்களின் பாவங் களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். மேலும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற் றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடை பிடிக்கின்றனர்.

இதை முன்னிட்டு, தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் நேற்று தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை சி.இருதயராஜ், உதவி பங்குத் தந்தை கே.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில்...

இதேபோல, திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்தி, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனர். அங்கு பங்குத் தந்தை சுவிக்கின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில்...

SCROLL FOR NEXT