தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வெளிமான் சரணாலயப் பகுதியில் கூட்டமாக சுற்றித் திரிந்த மான்கள். 
Regional02

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 320 மான்கள் : வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்

செய்திப்பிரிவு

வல்ல நாட்டில் உள்ள வெளிமான் சரணாலயத்தில் தற்போது 320 மான்கள் இருப்பது 2 நாட்கள் நடத்தப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை வன உயிரின ங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில், வனக்காப்பாளர்கள், தோட்டக் காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 35 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

2 நாட்கள் நடைபெற்ற கணக் கெடுப்பின் முடிவில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளி மான்கள் 243, புள்ளிமான்கள் 47, கடமான்கள் 30 இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர நரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் காணப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT