Regional03

பனங்காட்டு படை கட்சியினர் மறியல் :

செய்திப்பிரிவு

ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி சுயேச்சையாக போட்டியிடு கிறார். இவருக்கு ஆதரவாக ஆலங்குளம் காவல் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பேச கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். உரிய அனுமதி பெறாததால் ஹெலிகாப்டர் தரையிறங்க அதி காரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றது. இதை கண்டித்து பனங் காட்டுப் படை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT