Regional02

வங்கி ஊழியரிடம் அலைபேசி பறிப்பு கேரளா இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்தவர் எஸ்.பிரியா (39). இவர் காட்பாடியில் உள்ள வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில், நேற்று முன் தினம் இரவு பயணம் செய்துள்ளார்.

பெருந்துறை அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவரது பெட்டியில் ஏறியுள்ளார். பிரியாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை, 2 அலைபேசிகளை பறித்துவிட்டு தப்பினார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின்பேரில் திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.

ஈரோடு இருப்பு பாதை காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.கண்ணன், லோகநாதன், காவலர்கள் ராஜவேலு, தேவராஜ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனலூரைச் சேர்ந்த கே.சுதர்சன் (எ)குட்டியை (28) கைது செய்தனர். 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை, ரயில்வே காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT