ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து, ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். 
Regional01

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் : ஆத்தூர் பிரச்சாரத்தில் சரத்குமார் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே பேசியதாவது:

தமிழகத்தில் 53 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.

மாறி மாறி அவர்கள் ஆட்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தலின்போது, வாக்களிப்பதற்கு எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலைக்கு தமிழக மக்களின் பொருளாதாரம் உயராததே காரணம். நல்லாட்சி மலர அரசியலில் புதியவர்கள் வர வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கவே வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டீக்கடையில் டீ வாங்கி அருந்திய சரத்குமார், அந்தக் கடைக்காரரிடம் நலம் விசாரித்தார்.

SCROLL FOR NEXT