சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தபால் வாக்கு செலுத்திய தேர்தல் பணி ஊழியர். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

இரண்டாம் கட்ட பயிற்சியின்போது - தபால் வாக்கு செலுத்திய தேர்தல் அலுவலர்கள் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 1, 2 மற்றும் 3 என மூன்று பிரிவுகளில் மொத்தம் 20,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு கணினி மூலும் குலுக்கல் முறையில் பணிபுரியும் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச் சாவடி ஊழியர்களுக்கு அவரவர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஏற்கெனவே, முதல்கட்டமாக, தேர்தல் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கு, 2-ம் கட்டமாக பயிற்சி நடந்தது. பயிற்சி முகாம்களில், வாக்குச் சாவடி ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்த வசதியாக, 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனியாக வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில், வாக்குச் சாவடி ஊழியர்களில் பலர் தங்களது தபால் வாக்குப் படிவங்களை செலுத்தினர்.

SCROLL FOR NEXT