திருக்கோவிலூர் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
Regional02

திருக்கோவிலூர் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியி டுபவர் வி ஏ டி கலிவரதன். இவர் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்து பேசியதாக காணொலி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நேற்று திருக் கோவிலூர் அருகே மணம்பூண்டி மேடு பகுதியில் திருக்கோவிலூர் பாமக நகர செயலாளர் சரவணன், தொகுதி பொறுப்பாளர் சரவண குமார் தலைமையில் பாஜக வேட்பாளர் கலிவரதனை கண் டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டணிக்கட்சி வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியதும், தற்போது பாஜக வேட்பாளரான கலிவரதன் முன் னாள் பாமக எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT