கடலூர் ஆனந்த பவன் ஓட்டல் சார்பில் கடலூர் டிஎஸ்பி சாந்தியிடம் போரிக்கார்டுகள் வழங்கப்பட்டன. 
Regional02

கடலூரில் ஆனந்த பவன் ஓட்டல் சார்பில் - போலீஸாரிடம் போக்குவரத்து தடுப்பு கட்டைகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

கடலூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும், சட்டம் -ஒழுங்கை பாதுகாத்திடவும் ஆனந்தபவன் ஓட்டல் சார்பில் போக்குவரத்து காவல்துறையினருக்கு தேவையான பேரிக்கார்டுகள் (தடுப்பு கட்டைகள்) வழங்கும் நிகழ்ச்சி கடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூர் ஆனந்தபவன் ஓட்டல் உரிமையாளர் ராம்கி நாராயணன் கலந்து கொண்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 பேரிக்கார்டுகளை, கடலூர் டிஎஸ்பி சாந்தியிடம் வழங்கினார்.

பின்னர் டிஎஸ்பி சாந்தி அந்த பேரிக்கார்டுகளை போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங் கம், செந்தில்குமார் ஆகியோரிடம் வழங்கினார். இதில் போலீஸார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT