காஞ்சிரங்காலில் அதிமுக பிரமுகர் நாச்சியப்பன் வீட்டில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர் 
Regional01

சிவகங்கை அருகே பணப்பட்டுவாடா புகார் - அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி துறை சோதனை :

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே பணப்பட்டு வாடா புகாரையடுத்து அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. இந்நிலையில் பரிசுப் பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா உள்ளிட்ட கண்காணிப்புப் பணி களை தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் அதிமுக கிளைச் செயலாளர் நாச்சியப்பன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று புகார் வந்தது.

இதையடுத்து நாச்சியப்பன் மற்றும் அவரது மகன் வீடுகளில் வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர், வருமான வரி அதிகாரிகள் சோதனை செய் தனர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

SCROLL FOR NEXT