Special

உள்ளாட்சி புகார்களை தெரிவிக்க வசதி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் 2015 விதிகளின்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். வரி விதிப்பு முரண்பாடு, உள்ளாட்சி அமைப்புகளின் நிலங்களை ஆக்கிரமித்தல், நிதி முறைகேடுகள், லஞ்சம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக் கலாம். இது குறித்து செயலாளர், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவகம், 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கோ (044) 22201337 என்ற எண்ணிற்கோ ombudsmaniocal@tn.gov.in என்ற இணையத்திலோ தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT