திண்டுக்கல்லில் அன்னை தெரசா அரிமா சங்கம் சார்பில் சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். அரிமா மாவட்டத் தலைவர் சாமி வரவேற்றார்.
செயலாளர் ராஜ் குமார், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரிமா மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ஜானகிராமன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார். சமூக ஆர்வலர் காஜாமைதீன், மண்டலத் தலைவர் ரவி, வட்டாரத் தலைவர் ஜஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.