திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜை ஆதரித்து வாக்குச் சேகரித்தார் அவரது மகன் பிரசன்னா. 
Special

திருப்பத்தூரில் தந்தையை ஆதரித்து மகன் பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜை ஆதரித்து அவரது மகன் பிரசன்னா அண்ணா சிலை, ஆசாத் தெரு, சின்ன தோப்புத் தெரு, கல்லாகுழித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசிய தாவது:

எனது தந்தையை வெற்றி பெறச் செய்தால் திருப்பத்தூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்து வோம். மேலும் திருப்பத்தூரில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். அரசின் நலத் திட்டங்கள் உடனுக்குடன் கொண்டு வரப்படும், என்று கூறினார்.

தலைமைக் கழகப் பேச்சாளர் வைகைபாரதி வாஹித், நகரச் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT