சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை சேலம் அண்ணா பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலத்தில் கரோனா பரவல் ஏற்படாத வண்ணம் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்புகண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், விழிப்புணர்வூட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட அண்ணா பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நலன் கருதி இனி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதோடு கரோனா தடுப்பு வழிகாட்டிநெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.