Regional03

தூத்துக்குடியில் வைகோ : பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுக ஆட்சிஊழல் மலிந்த ஆட்சியாக உள்ளதுஎன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து, குரூஸ் பர்னாந்து சிலை அருகே திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய,மாநில அரசுகள் இயங்குகின்றன. எந்தத் தவறும் செய்யாதபொதுமக்கள் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் சிந்திய ரத்தத்துக்கு நீதி வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வாதாடினேன். மக்களாகிய நீங்கள் தேர்தல் மூலம் அதற்கு நீதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஊழல் மலிந்த ஆட்சியாக உள்ளது. முதல்வர், துணை முதல்வர் என அனைத்து அமைச்சர்கள் மீதும்திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாத நிலை உள்ளது. ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும். தமிழக பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணிவெற்றி பெறும். அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

தமிழகத்தில் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு தர வேண்டும். கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் போராடுவேன், என்றார் அவர்.

நிகழ்ச்சியில், மதிமுக மாநிலமீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகரச் செயலாளர் முருகபூபதி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் தா. ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கா.மை. அகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாளை யங்கோட்டையிலும் வைகோ பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT