திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்தி (18), அஜய் குமார் (18) ஆகியோர் நேற்று கந்திலி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பனந்தோப்பு என்ற பகுதி அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், பெங்களூருவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் 3 பேருடன் வந்தவர்கள் நாட்றாம்பள்ளி அருகே பங்களாமேடு என்ற பகுதியில் எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதினர். இதில், ஆம்பூரைச் சேர்ந்த கார்த்திக் (30), வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார் (19) ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேசன் (35) என்பவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.