Regional02

சட்டப்பேரவை தேர்தல் தபால் வாக்குப் பதிவு தொடக்கம் :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் நேற்று வாக்களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1095 காவல் துறையினர், சுமார் 140 ஊர் காவல் படையினர் ஆகியோர் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காவல் துறையினர் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட போலீஸார் காஞ்சிபுரம் மக்கள் நல்வாழ்வுக் கூடத்திலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதேபோல் ஆலந்தூர், பெரும்புதூர் தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவகங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

SCROLL FOR NEXT