Regional01

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 17 வயது சிறுவன், கடந்த 23ம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் விடப்பட்டான்.

அந்த சிறுவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த சிறுவன் தான் வைத்திருந்த போர்வையை கிழித்து ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கூர்நோக்கு இல்லத்தில் உள்ள காவலாளி சதீஷ்குமார் நள்ளிரவு வழக்கம் போல் இல்லம் முழுவதும் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கண்காணிப்பாளர் பிரபாகரனுக்கு தகவல் அளித்தார். கடலூர் புதுநகர் காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT