Regional02

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சாதி கலவரம் இல்லை : முதுகுளத்தூர் தொகுதியில் ஜான் பாண்டியன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எங்கும் சாதி கலவரம் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியை ஆதரித்து ஜான் பாண்டியன் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஏழு உட்பிரிவு சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. 40 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றம் கிடைத்துள்ளது. அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தேவேந்திரகுல மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் எங்கும் சாதி கலவரம் நடக்கவில்லை. அரசு அதிகாரிகள் பாதுகாப்பாக வேலை பார்த்தனர். திமுகவால் எந்தக் குற்றச்சாட்டும் அதிமுக மீது சுமத்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

திருவாடானையில் அதிமுக வேட்பாளர் ஆணிமுத்துவை ஆத ரித்து அவர் வாக்குச் சேகரித்தார்.

SCROLL FOR NEXT