Regional02

சிவகங்கை அருகே அதிமுக பிரமுகரிடம் : ரூ.96 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே அதிமுக பிரமுகரிடம் இருந்து ரூ.96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் வட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது காஞ்சிரங்கால் அதிமுக கிளைச் செயலாளர் அலியத்தான் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.96 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT