Regional01

கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரி - தஞ்சாவூர், ரங்கம் கோயில்களில் பக்தி பாடல்களைப் பாடி பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘கோயில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 11 கோயில்களில் பக்தி பாடல்கள் பாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களுடன் உள்ளூர் மக்கள் இணைந்து நேற்று மாலை தேவார பாடல்களை பாடி, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும், கோயிலின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், ‘கோயில் அடிமை நிறுத்து' என்ற பதாகையை ஏந்தியபடி நின்று, தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல, ரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள், ‘கோயில் அடிமை நிறுத்து' என்ற பதாகையை ஏந்தியபடி, பக்திப் பாடல்களை பாடினர்.

SCROLL FOR NEXT