Regional02

மருதன்கோன்விடுதியில் விவசாயிகள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி மயிலன்கோன்விடுதி ஆயர் தெரு வில் உள்ள மின்மாற்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது.

இதையடுத்து, மின் வாரிய அலு வலர்கள், வேறொரு மின்மாற்றியில் இருந்து வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். பழுத டைந்த மின்மாற்றியை சீரமைக் கவில்லை. இதுகுறித்து பல முறை மின்வாரிய அலுவலர்களிடம் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை.

மின் மோட்டார்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் பயிர் கள் கருகிவிட்டன.

இதனால் விரக்தி அடைந்த மயிலன்கோன்விடுதி விவசாயிகள், மருதன்கோன்விடுதி 4 சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், மின்வாரிய இள நிலை பொறியாளர் மகாதேவராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து புதிய மின்மாற்றி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT