Regional02

கரூரில் உரிய முறையில் தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து

செய்திப்பிரிவு

கரூரில் உரிய முறையில் தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளர் பிஎஸ்என்.தங்கவேல், கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி தங்கராஜ் ஆகியோரை ஆதரித்து அரவக்குறிச்சி புங்கம் பாடி முனையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் செய்து பேசியது:

ஆளுங்கட்சி அராஜகத்திலும், திமுக அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல திமுக நினைக்கிறது. இவற்றுக்கு மாற்றுச் சக்தியாக வெற்றிக் கூட்டணியாக அமமுக போட்டியிடுகிறது.

கரூரில் 500 தேர்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆட்சி அதிகாரத்தை ருசித்தவர்கள் எப்படி மோதிக்கொள்கின்றனர். அரசு கஜானாவை கொள்ளை அடிக்க துடிக்கின்றனர். இரண்டு கட்சியினரும் வெட்டு, குத்து என இறங்கி உள்ளனர்.

தேர்தல் ஆணையம் கரூரில் உரிய முறையில் தேர்தலை நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கை போய்விடும் என்றார்.

SCROLL FOR NEXT