தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ் 
Regional03

வாக்குப்பதிவில் ரகசியம் காக்க அறிவுரை :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவில் ரகசியத்தை காக்க வேண்டும். என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வேண்டு கோள் விடுத்தார்.

காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டப்பேரவைதொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பேசியதாவது:

தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பொறுமையாக தெரிந்துகொண்டு, தேர்தல் நடைபெறும் சமயத்தில் அவற்றை கவனமுடன் கையாள வேண்டும். கரோனா காலகட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் அலுவலர்கள் கூடுதல் சிரத்தை எடுத்துதேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

வாக்குப்பதிவில் ரகசியத்தை காக்க வேண்டும். வாக்குச்சீட்டு இயந்திரம் வைக்கப்படும் பகுதிக்குவாக்குச்சாவடி தலைமை அலுவலரைத் தவிர யாரும் செல்லக்கூடாது. அதுபோல மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, அதில் பதிவாகும் வாக்குகளை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தவறாமல் அழித்துவிட வேண்டும். இதில் அலுவலர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளருடன் ஒருவர் மட்டுமே உள்ளே வர வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஒருவர் அழைத்து வருவதை தடுக்க அவரது வலது ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும். அனைவரும் கவனமுடன் செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 2-ம் கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி னார்.

SCROLL FOR NEXT