வேலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ரஞ்சித்குமார் (25). கொலை உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடையவர். தலைமறைவாக இருந்த இவரை வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதனை யேற்று ரஞ்சித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.