TNadu

வங்கி மேலாளரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

முன்னுக்குப் பின் முரணான தகவலால் ராமநாதபுரத்தில் வங்கி அதிகாரியிடம் இருந்து ரூ. 50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பறக்கும்படையினர் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் நான்கு முக்கு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி வேனில் ரூ.50 லட்சம் இருந்ததை கண்டறிந்து, வேனில் இருந்த பெரியபட்டினம் இந்தியன் வங்கி மேலாளர் மணிகண்டனிடம் விசாரித்தபோது ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தார்.

அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்து ராமநாதபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT