நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுககூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. கோத்தகிரியை சேர்ந்த மு.போஜராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹீம், உதகை ஏடிசி, மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது,"மதச்சார்பின்மை என்ற பெயரில்காங்கிரஸும், திமுகவும் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகின்றன. பாஜக மட்டுமே சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. கடந்தகாலங்களில் திமுக ஆட்சியில்ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துநடைபெற்று வந்தது.
ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற கருத்துக்கணிப்பை திணித்து,காவல்துறையினரையே தாக்கும்நிகழ்ச்சி சமீபத்தில் அரங்கேறியது.திமுக ஆட்சியில் பெண்களுக்கு, ஏன் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. நிலங்களை அபகரிக்கும் கட்சி. இந்து மதத்தை சிதைத்து, கடவுள் நம்பிக்கையை இழிவுப்படுத்துபவர்கள்.
அதிமுக ஆட்சியில் இந்துகள்,இஸ்லாமியர்கள் நல்லிணக்கமாக உள்ளனர். மத்திய அரசிடம்நல்லிணக்கமாக உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
இத்தகைய நல்லாட்சி தொடர வேண்டும்" என்றார். இந்நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லோயர் பஜார், மெயின் பஜார் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கி பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் சாதனைகளை வியாபாரிகளிடம் விளக்கினார். வேலூர் இப்ராஹீமின் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினர் மற்றும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு அவரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பிரச்சாரம் மேற்கொள்ள காந்தல் பகுதிக்கு செல்வோம் எனக் கூறி, உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ், அதிரடிப்படை கூடுதல் எஸ்.பி. மோகன்நிவாஸ், டிஎஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.