கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 14,404 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இப்பணியாளர்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய உள்ளனர் என்பதற்கான இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணினி அறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு நடைபெற்றது. ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.