Regional02

நீதிமன்றத்தில் : பெண் தீக்குளிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(38), இவரது கணவர் முரளி. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கண்ணம்மாள், கணவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கணவருடன் சேர்ந்து வாழுமாறு கண்ணம்மாளின் உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த கண்ணம்மாள், நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வந்தபோது தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். தாடிக்கொம்பு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT