Regional03

பறக்கும் படை சோதனையில் ரூ.1.53 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

ஊத்தங்கரை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, தருமபுரி - திருப்பத்தூர் சாலையில், பெங்களூருவைச் சேர்ந்த பிரபு என்பவர் வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், உரியஆவணங்கள் இல்லாமல் ரூ.94 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல், ஊத்தங்கரை அருகே கதவணி சமத்துவபுரம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் வாகனத் தணிக்கை நடந்தது. இதில், அரூர் அருகே உள்ள நாகமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.59 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 200 தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக் கப்பட்டது.

SCROLL FOR NEXT