Regional02

தேர்தல் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத் தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 45 பறக்கும் படையினர்ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 45 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 5 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 5 செலவின கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50.56 லட்சம் பணம், 10.70 கி.கி. வெள்ளி உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பாக இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1950 சேவை எண் மூலம் 1532 தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT