Regional01

குட்டையில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு அருகே குட்டையில் மூழ்கி தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி சென்னம்மாள்(33). இவர், அதே பகுதியில் உள்ள குட்டையில் துணி துவைப்பதற்காக மகள் மோனிஷாவை(12) அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது குட்டையில் இறங்கி குளித்த மோனிஷா, ஆழமானப் பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சென்னம்மாள், மகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இருவரும் நீரில் மூழ்கினர். இதையறிந்த கிராம மக்கள், இருவரையும் மீட்டு, திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாத்தனூர் அணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT