100 சதவீதம் ஆசிரியர்கள், அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துவன்னியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல், 6-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 23,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீஸார், உதவியாளர்கள், ஆசிரியர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் 10 சதவீதம் தேர்தல் பணி காத்திருப்போர் பட்டியல் உட்பட 1,81,000 பேர் தேர்தலில் பணியாற்ற உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 சதவீதம் தபால் வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தல்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படாதது பெரும் குழப்பத் துக்கு வழிவகுத்தது. இம்முறை 100 சதவீதம் ஆசிரியர்கள், அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.