Regional02

இரும்புக்கோட்டையாக அதிமுகவை மாற்றியவர் ஜெ. : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

செய்திப்பிரிவு

அதிமுகவை இரும்புக் கோட்டை யாக மாற்றியவர் ஜெயலலிதா என, திருப்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.என். விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி சு.குணசேகரன், காங்கயம் தொகுதி ஏ.எஸ்.ராமலிங்கம், பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோரை ஆதரித்து யூனியன் மில் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

அதிமுகவை இரும்புக் கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு திட்டத்தையும் அடித்தட்டு மக்களுக்காக உருவாக்கினார். பெரியார் கண்ட கனவான ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிரூபிக்கும் திட்டங்களை தீட்டியவர் ஜெயலலிதா. மக்களிடம் பெற்ற வரியை, மக்களிடமே நலத்திட்டங்களாக திரும்ப வழங்கியவர் ஜெயலலிதா.

திருப்பூர் மாநகரம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த தொழில் வளர்ச்சியைவிட, பன்மடங்கு அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ந்துள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில், மக்கள் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு கெடவில்லை. சிறுபான்மையினருக்கு அதிமுக உறுதுணையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT