உலக காச நோய் தினத்தை முன்னிட்டு பொதுசுகாதாரத் துறை சார்பில், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் மற்றும் காசநோய் மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் காசநோய் அறிகுறிகள் கண்டறியும் வழிமுறைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் காசநோய் சிகிச்சை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கந்தசாமி செய்திருந்தார்.