Regional02

கரோனா தொற்றால் பெட்ரோல் விலையேற்றம் : கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கருத்து

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கோத்தகிரியைச் சேர்ந்தமு.போஜராஜன் போட்டியிடுகிறார். உதகை சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளர்களாக கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தலைமையில், குழு நியமிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் மற்றும் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் ஆகியோர் உதகை மறை மாவட்ட ஆயர் அ.அமல்ராஜை நேற்று சந்தித்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் கர்நாடககூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதரவு பெற அனைத்துசமுதாய மக்களையும் நேரில் சந்தித்து வருகிறோம். உதகை தொகுதியில் 10 முதல் 15 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக உதகையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். கரோனா காலத்தில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டது. கரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிலையேற்றத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. சில மாதங்களாக பொருளாதாரம் மீண்டு வருவதால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT