கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊடக சான்றளிப்புக் குழுவின் முன் அனுமதி பெற்ற பின்னரே அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், ஒலி மற்றும் ஒளி விளம்பரங்கள் ஒளிபரப்புக்கு அனுமதி பெற ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் ஆகி யோரின் விளம்பரங்களையும்,கூட்டங்கள், பரப்புரைகள் இவற்றில் விதிமீறல் கள் நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள். இந்த மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்திகள், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுவதை பதிவு செய்கின்றனர். தேவைப் படும் செய்திகளை நகல் எடுத்து கணினியில் பதிவு செய்கின்றனர். இதற்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டு வீடியோ செய்தி களும் கணினிகளில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும், அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகி வரும் உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பும் கண் காணிக்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யும்போது, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரம் வெளியிட வேண்டும். மேலும், அனுமதி எண் பெறாத விளம்பரங்களை உள்ளுர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பக் கூடாது. அவ்வாறு ஒளிப்பரப்பினால் தொடர்புடைய தொலைக் காட்சியின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.