போடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்த மகன் பி. ரவீந்திரநாத் எம்.பி. 
Regional01

போடியில் வீதிவீதியாக சென்று தந்தைக்கு வாக்கு சேகரிக்கும் ரவீந்திரநாத் எம்பி :

செய்திப்பிரிவு

அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு சோதனைகளுக்கு இடையே அதிமுகவை பலப்படுத்தி உள்ளனர். திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் சுயநலக்காரர். அவர் ஆண்டிபட்டியில் போட்டியிட்டால் டெபாசிட் போய் விடும் என்பதால், பல கட்சிகளுக்கு மாறி தற்போது போடியில் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT