Regional02

யானை தாக்கியதில் சிறுமிக்கு கால் முறிவு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே உள்ள குட்டிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன். இவரது மகள் தர்ஷினி (14). ராமச்சந்திரன் தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தர்ஷினி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை, திடீரென தர்ஷினியை துரத்தியது. தப்பியோட முயற்சி செய்த போது யானை, தர்ஷினியை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து யானையை அங்கிருந்து விரட்டினர். தர்ஷனியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT