Regional02

விஷம் குடித்து தம்பதி தற்கொலை :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(68), அவரது மனைவி பாஞ்சாலி(65). இவர்கள் இருவரும் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை அருகே காவிரி ஆற்றின் கரையில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். பாஞ்சாலிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கடந்த 21-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இருவரும், பின்னர் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து, ஆற்றங்கரையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

SCROLL FOR NEXT