Regional03

பறக்கும் படை சோதனையில் 6 மூட்டை குட்கா பறிமுதல் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் - கீழப்புலியூர் சாலையில் நேற்று நடத்திய வாகன சோதனையின்போது ஒரு சரக்கு வேனில் எடுத்துச் சென்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 6 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவற்றை மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், சரக்கு வேனில் குட்கா பொருட்களை எடுத்து வந்த சேலம் மாவட்டம் சூரமங் கலத்தை அடுத்த கோனேரிக் கரை பகுதியைச் சேர்ந்த அருண் குமார்(29) என்பவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT