திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் எம்ஜிஆர் தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம்(38). இவரது சுமை ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
அடுத்த நாள் காலையில் பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. விகேபுரம் போலீஸார், சிவந்திபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வைகுண்டமணி (23) என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.