திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம், திருமலைகொழுந்துபுரம் புதிய தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்யப்படும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் வால்வுகளை சரிசெய்யும் பணி இன்று (25-ம் தேதி) நடைபெற உள்ளது.
எனவே, பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட கே.டி.சி நகர், காமாட்சி நகர், டார்லிங் நகர், கோ ஆப்டெக்ஸ் காலனி ஸ்டேஜ் 2 , 3, வ.உ.சி நகர் மற்றும் வி.எம் சத்திரம், ரஹ்மத் நகர், சாந்தி நகர், காமராஜ் நகர், பொன்மணி காலனி, வேலவர் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, சீனிவாச நகர் மற்றும் ஐ.ஓ.பி காலனி ஆகிய பகுதிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.