திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.விஷ்ணு தலைமை வகித்தார். பொது தேர்தல் பார்வையாளர்கள் சுப்ரதா குப்தா, சுரேந்திர நாராயண பாண்டே, நூன்சவாத் திருமலை நாயக், அலாகேஷ் பிரசாத் ராய், மாவட்ட காவல் பார்வையாளர் சுதன்சுகுமார், தேர்தல் செலவின பார்வையாளர்கள் சுபோத்சிங், ராஜேஷ் திரிபாதி பங்கேற்றனர்.
இதனிடையே தேர்தலை அமைதியாகவும், நேர்மையாக வும் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோ சனை மேற்கொண்டனர்.
ராதாபுரம் தொகுதிக்கு தேவைப் படும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணியும் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.