Regional02

குமரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்து வமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று ஏற்பட்ட 120-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் ஒரு போலீஸ்காரர், மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். தக்கலை முளகுமூட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்து போனார்.

தென்காசி

SCROLL FOR NEXT