Regional02

அடிப்படை வசதிகள் கோரி பதாகை வைத்த பொதுமக்கள் :

செய்திப்பிரிவு

திருப்பூர் - மங்கலம் சாலை கோழிப் பண்ணை மற்றும் பிருந்தாவன் அவென்யூ, சிபி அவென்யூ, செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர்.

மேற்கண்ட பகுதிகளில் சாலை, சாக்கடை, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மாநகராட்சி ஆணையர் மற்றும் ஆட்சியரிடம் பல முறை பொதுமக்கள் மனு அளித்தனர். இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக ‘அரசு அதிகாரிகள் கவனத்துக்கு’ என்ற தலைப்புடன் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தப் பகுதியில் பொதுமக்கள் பதாகை வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT