Regional01

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரூர் வெங்கமேடு பகுதியில் கடந்த 21-ம் தேதி இரவு திமுக-அதிமுக இடையே மோதல் நடைபெற்றது. இதில், திமுகவினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வெங்கமேட்டில் திமுகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விஏஓ அங்குராஜ் வெங்கமேடு போலீஸில் அளித்த புகாரின்பேரில், திமுகவினர் 40 பேர் மீது, தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய் தனர்.

SCROLL FOR NEXT