திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்கிறார் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம். 
Regional02

மன்னார்குடி திமுக வேட்பாளரை ஆதரித்து - முன்னாள் மத்திய அமைச்சர் பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து தஞ்சை எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் நேற்று மன்னார்குடியில் பிரச்சாரம் செய்தார். மன்னார்குடி ராஜகோபாலசமுத்திரம் கீழவீதி, அன்னவாசல் தெரு, நீடாமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் எம்.பி ஏகேஎஸ்.விஜயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகரச் செயலாளர் கணேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் மன்னை சோழராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT