Regional02

மதுபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறை அடுத்த மேலப்புனவாசல் ராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி(75). இவரது மனைவி குழந்தைமேரி. இவர்களின் மகன் கள் நியூட்டன்(46), லாரன்ஸ், ஜெயசீலன். மகன்களுக்கு திரும ணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், துரைசாமியும், குழந்தைமேரியும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்து துரைசாமியிடம் தகராறு செய்த நியூட்டன், அரிவாளால் துரைசாமியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துரைசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, துரைசாமியின் சடலத்தை அடக்கம் செய்ய நேற்று காலை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதையறிந்த டிஎஸ்பி சித்திரவேல், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியசாமி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, துரை சாமியின் சடலத்தைக் கைப்பற்றி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர் பாக மருவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நியூட்டனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT