தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வை நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இத் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் எந்த ஓர் அரசுப்பள்ளியும் இச்சாதனையை செய்யவில்லை. இந்த மாணவ, மாணவியரையும், தலைமை யாசிரியை பி. சாந்தினி பொன்குமாரி, பயிற்சி கொடுத்த ஆசிரியர் பா. ஜேசு ஆகியோரையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏசுதாசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.