Regional03

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை - உதயநிதி, வைகோ பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

திமுக தூத்துக்குடி வடக்குமாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்துதிமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் நாளை (மார்ச்25) தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு தூத்துக்குடி விவிடி பிரதான சாலையில் டூவிபுரம் 5-வதுதெரு, அண்ணாநகர் 7-வது தெருசந்திப்பு பகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து அவர் பேசுகிறார். தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அத்தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி.மார்க்கண்டேயனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இதேபோல் மார்ச் 25-ம் தேதிமாலை 5 மணிக்கு கோவில்பட்டி காமராஜ் சிலை அருகே அத்தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு புதூரில் விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து பேசுகிறார்.

27-ம் தேதி மாலை 6 மணியளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் வைகோ பங்கேற்று திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT